வேந்தர் தொலைக்காட்சியில் இசைக்காக ஒளிபரப்பாகும் "இன்னிசை மெட்டுகள்" நிகழ்ச்சி
வேந்தர் தொலைக்காட்சியில் இசைக்காக ஒளிபரப்பாகும் ‘இன்னிசை மெட்டுகள்’ நிகழ்ச்சி, இளையராஜாவின் ஹிட்டான பாடல்களை ஒளிபரப்புவதன் மூலம் மக்கள் மத்தியில் தனி இடத்தை பெற்றுள்ளது.
நாள் முழுவதும் கேட்டுக்கொண்டிருந்தாலும் சளிக்காத இசைக்கு 24 மணிநேரமும் சேனல்கள் வந்த நிலையிலும், தனித்துவமான பாடல்களின் மூலம் தனக்கான ரசிகர் கூட்டத்தை தக்கவைத்துள்ளது வேந்தர் டிவியின் இன்னிசை மெட்டுகள் நிகழ்ச்சி.
இசைஞானி இளையராஜாவின் 80 மற்றும் 90 ஆகிய கால கட்டங்களில் வந்து மக்களின் மனதை கொள்ளையடித்த திரைப்பாடல்களை நினைவூட்டும் விதமாக பாடல்கள் ஒளிபரப்பப்படுகிறது. அரை மணிநேரத்தை நொடிப்பொழுதியில் கழிக்கும் உணர்வை ஏற்படுத்தும் விதமாக மெகா ஹிட்டான பாடல்கள் தேர்வு செய்து ஒளிபரப்பப்படுகிறது.
இந்நிகழ்ச்சி அரக்கப்பறக்க வேலைக்கு செல்லும் இசைஞானியின் ரசிகர்களுக்கு ஏற்ப திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8:00 மணிக்கும், வேலை பளு முடிந்து இசைஞானியின் இசையில் இளைப்பாறுவதற்காக இரவு 7:00 மணிக்கும் வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.