வானம் கொட்டட்டும் திரை விமர்சனம்

வானம் கொட்டட்டும்  திரை விமர்சனம்

மணிரத்னம் தயாரிப்பில் தனா இயக்கத்தில் சரத்குமார், ராதிகா,விக்ரம் பிரபு, மடோனா சபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு என பலர் நடித்து உள்ளார்.

படத்தில் சரத்குமாரும், ராதிகாவும் கதாப்பாத்திரங்களாகவே வாழ்ந்து இருக்கின்றனர்.
சரத்குமார் தனது அண்ணன் பாலாஜி சக்திவேலை கொல்ல முயற்சித்தவர்களை கொலை செய்து விட்டு சிறைக்கு சென்றுவிடுகிறார். பின்னர் சரத்குமாரின் மனைவி ராதிகா தனது பிள்ளைகள் விக்ரம் பிரபு மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷுடன் சென்னைக்கு குடியேறுகிறார். கஷ்டப்பட்டு உழைத்து குழந்தைகளை வளர்த்து ஆளாக்குகிறார். முதலில் டிரைவராக வேலைபார்த்து வரும் விக்ரம் பிரபு, பின்னர் கோயம்பேடு மார்க்கெட்டில் சொந்தமாக வாழை மண்டி ஆரம்பிக்கிறார். 

அவரின் தங்கை ஐஸ்வர்யா ராஜேஷ் சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார்.ஐஸ்வர்யா ராஜேஷ் மீது அன்பு காட்டும் ஒரு நபராக சாந்தனு வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் சாந்தனு உடனும் நல்ல நண்பராக பழகுகிறார். இந்த சூழலில் கொலை வழக்கில் 16 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்த சரத்குமார், விடுதலையாகி குடும்பத்தை பார்க்க ஆவலோடு வருகிறார். ஆனால் விக்ரம் பிரபுவும், ஐஸ்வர்யா ராஜேஷும் அவரை ஏற்க மறுக்கிறார்கள். இதனிடையே, சிறையில் இருந்து வந்த சரத்குமாரை தீர்த்து கட்ட, அவர் கொலை செய்தவரின் மகனான நந்தா துடித்து கொண்டிருக்கிறார். இதன் பின்னர் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

மடோனா  செபாஸ்டியன்  வரும்  காட்சிகளில்  பெரும்பாலும்  அழுகை  சோகம்  அப்பாவை  பிரிந்த  ஒரு  பெண்  என்று  பலவற்றை  வைத்து  ஒரு  கதாபாத்திரம்  அவருக்கு  அமைத்து  அதனை  கச்சிதமாக  செய்துள்ளார்.

நந்தாவிடம்  இருந்து  சரத்குமார்  தப்பிப்பாரா  பிள்ளைகள்  இருவரும்  அவருடன்  ராசி ஆனார்களா  என்பது   தான்  கதை.சில இடங்களில் திரைக்கதையின் வேகம் குறைகிறது.சித் ஸ்ரீராம் இசையில் பாடல்கள் மற்றும்  அதேபோல் பின்னணி இசை உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு உயிர் கொடுக்கிறது.