புதிய தலைமுறையின் சக்தி விருதுகள் 2020

புதிய தலைமுறையின் சக்தி விருதுகள் 2020

கடந்த ஐந்து ஆண்டுகளாக புதிய தலைமுறையின் சக்தி விருதுகள் நிகழ்ச்சி ஆறாம் ஆண்டாக நடந்தேறியது. பிப்ரவரி மாதம் 26 ஆம் நாள் சென்னை உலக வர்த்தக மையத்தில் நடந்த விருதுவிழாவில் புலமை, திறமை, கருணை, துணிவு, தலைமை மற்றும் வாழ்நாள் சாதனை என்ற ஆறு தலைப்புகளில் சிறந்து விளங்கிய பெண் ஆளுமைகளுக்கு விருது வழங்கி சிறப்பிக்கப் பட்டது.  முதல் வனவியல் ஒளிப்பதிவாளர் ராதிகா இராமசாமி, பூவரம்பூ பீ பீ மற்றும் சில்லுக்கருப்பட்டி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இளம் இயக்குநர் ஹலிதா சமீம்,  மூன்றாம் பாலினத்தை சார்ந்த இந்தியாவின் முதல் வழக்குரைஞர் சத்யஸ்ரீ சர்மிளா, ஐயமிட்டு உண் என்ற உணவுப்பெட்டகம் அமைத்திருக்கும்  ஐசா பாத்திமா, பிரிக்கால் நிறுவனத்தின் தலைவர் வனிதா மோகன், மற்றும் வாழ்நாள் சாதனைக்காக பின்னணிப்பாடகி பி சுசிலா ஆகிய ஆறுபேருக்கும் சக்தி விருதுகள் வழங்கபட்டன. மிகப்பிரம்மாண்டமான அரங்கில் நடந்த இந்த விருதுவிழாவில் ஆன்றோர்கள் சான்றோர்களும் ,அரசியல் பிரமுகர்களும் திரைப்படக் கலைஞர்களும் கலந்துகொண்ட இந்த விழா நிகழ்ச்சி மார்ச் 7-ஆம் தேதி காலை 9:00 மணிக்கும் மற்றும் மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினத்தன்று இரவு 7:30 மணிக்கும் புதிய தலைமுறையில் ஒளிபரப்பாகிறது.