பெப்பர்ஸ் டிவியில் “படித்ததில் பிடித்தது” நிகழ்ச்சி
பெப்பர்ஸ் டிவியில் வாரந்தோறும் “படித்ததில் பிடித்தது” நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரபலமான எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள் என பல துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு தாங்கள் படித்த புத்தகங்களிலிருந்து பிடித்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.
இது வரை இந்த நிகழ்ச்சியில் இறையன்பு ஐ ஏ எஸ், எழுத்தாளர்கள் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பேச்சாளர் கு.ஞானசம்பந்தன் ,முன்னாள் மாவட்ட கண்காணிப்பாளர் கலியமூர்த்தி , நந்தகுமார் ஐ .ஆர் .எஸ் ,எழுத்தாளர் கண்மணி ராஜாமுகமது ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இந்த வாரம் படித்ததில் பிடித்தது நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் கலந்து கொண்டு அவரது வாழ்க்கையில் தன்னை கவர்ந்த ,தன் பாதையை மாற்றி வாழ்க்கைக்கு வழி காட்டிய ராமானுஜர் ,திருவள்ளூர் ,அப்துல் கலாம் மற்றும் நரேந்திர மோடி ஆகியோர் எழுதிய புத்தகங்கள் பற்றியும் , அரசியலில் மனதை பாதித்த தாக்கங்கள் பற்றியும் உணர்வுப் பூர்வமாக பகிந்துகொள்கிறார். சனிக்கிழமை தோறும் காலை 11:00 மணிக்கு பெப்பர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை அஸ்வின் தொகுத்து வழங்குகிறார் .