கலைமாமணி விருதுக்கு நன்றி: நிகில் முருகன்
தமிழ்நாடு அரசின் பெருமைமிகு விருதான கலைமாமணி விருதுக்கு என்னை (நிகில் முருகன்) தேர்வு செய்ததற்காக மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு மு.பெ. சாமிநாதன் அவர்களுக்கும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் நிர்வாகிகள் மற்றும் தேர்வு குழு உறுப்பினர்களுக்கும், எனக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், என் குடும்பத்தினர் மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்ட திரையுலகினருக்கும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கலைமாமணி விருது அளிக்கும் ஊக்கத்துடன் உங்கள் அனைவருடனும் இணைந்து தொடர்ந்து பயணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்...
நன்றி...
வணக்கம்
நிகில் முருகன்