யார்க்கர் கிங் நடராஜனை வாழ்த்திய நயன்தாரா
யார்க்கர் கிங் நடராஜனை வாழ்த்திய நயன்தாரா
தமிழகத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீசினார். குறிப்பாக நட்சத்திர வீரர்களை தனது துள்ளியமான யார்க்கர் மூலம் திணறடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதன் பலனாக அடுத்ததாக நடக்க இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் இவருக்கு இடம் கிடைத்துள்ளது.
இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த நடராஜன், ஆர்ஜே பாலாஜி இயக்கி உள்ள மூக்குத்தி அம்மன் படத்தை காண தானும் தனது குடும்பத்தினரும் ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தனது கிராம மக்கள் ஆர்ஜே பாலாஜியின் ஐபிஎல் தமிழ் கமெண்ட்ரிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் என கூறியிருந்தார்.
இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை நயன்தாரா, “தாங்களும், தங்களது குடும்பத்தினரும் மூக்குத்தி அம்மன் படத்தை காண ஆவலோடு இருப்பதை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்ததற்கு வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.