10 வருட கலைப்பயணம் - இயக்குனர் சுசீந்திரன் நன்றி

10 வருட கலைப்பயணம் - இயக்குனர் சுசீந்திரன் நன்றி

ஜனவரி 29 - இந்த நாளை என்னால் மறக்கவே முடியாது - 2009 இதே தேதியில் வெண்ணிலா கபடி குழு ரிலீஸ் ஆச்சு - இன்றோடு 10 வருடங்கள் முழுமை அடைந்துள்ளது - என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்..

இந்த பத்து வருடத்தில் என்னுடன் பணிபுரிந்த நடிகர்கள், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் எனக்கு வாய்ப்பளித்து தயாரிப்பாளர்கள் அனைவருக்கும்......எனது மனமார்ந்த நன்றி மிக முக்கியமாக எனது நண்பர்கள், எனது உதவி இயக்குனர்கள், எனது குடும்பத்தினர் அனைவருக்குமே நன்றி..........

இந்த நாளில் எனக்கு முதல் வாய்ப்பளித்த தயாரிப்பாளர் ஆனந்த் சக்கரவர்த்திக்கும், இணை தயாரிப்பாளர் ஸ்ரீநிவாசன், அப்சர் அவர்களுக்கு நன்றி.............

என் முதல் படத்தில் அறிமுகமான விஷ்ணு, சூரி, சரண்யா அப்புக்குட்டி, ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் - க்கு எனது வாழ்த்துக்கள் .. இசையமைப்பாளர் செல்வ கணேஷுக்கும் எனது வாழ்த்துக்கள்....

என்னுடன் முதல் படத்தில் பணியாற்றிய எடிட்டர் காசி சார், அனந்தன் கலை இயக்குனர், நடிகர் நண்பர் கிஷோர் ... அனைவருக்கு நன்றிகள்..  பத்திரிக்கை நண்பர்களுக்கும் எனது நன்றி ............... சுசீந்திரன்