யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை

யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை
யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை

தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

என்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து, எனது இருபது ஆண்டுகால இசைக்கு என்றென்றும் துணையிருக்கும் என் இசையின் இதயப்பூர்வ ரசிகர்களுக்கும், என்னோடு இணைந்து பணியாற்றிய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள், நடிகர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், என்றும் மனதோடு இருக்கும் பத்திரிகை தொலைக்காட்சி வானொலி ஊடக நண்பர்களுக்கும், என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

யுவன் ஷங்கர் ராஜா