தமிழில் பிரம்மாண்டமாக வெளிவரவுள்ள எம்ஐபி - இன்டர்நேஷனல்

தமிழில் பிரம்மாண்டமாக வெளிவரவுள்ள எம்ஐபி - இன்டர்நேஷனல்

MEN IN BLACK: INTERNATIONAL
 
- ஆங்கிலம் மற்றும் தமிழியில் உருவாக்கம் - Sony Pictures நிறுவனம்
- வெளியீடு -14th June 

முன்னோட்டம் - மாலிபு மற்றும் மார்வெல் நகைச்சுவை புத்தக தொடர்களில் மிகவும் புகழ் வாய்ந்த, லோவல் கனிங்ஹாம் எழுதிய Men in  Black, திரை வடிவம் பெற்று இதுவரை மூன்று முறை வெற்றிகரமாக வலம் வந்தது நினைவிருக்கலாம்!  Men in Black (1997), Men  in  Black  2 (2002), Men  in Black  3 (2012) ஆகிய மூன்றுமே விஞ்ஞான ரீதியில் உருவாக்கப்பட்ட அதிரடி சண்டை காட்சிகளும் நகைச்சுவையும் ஒருங்கே அமையப்பெற்ற வெற்றி சித்திரங்கள்!

தயாரிப்பு-மேம்பாடு மற்றும் தொழில் நுட்ப ரீதியிலான மேதாவிலாசம் ஆகிய அம்சங்கள் அம் மூன்று படங்களையும் மிக பெரிய வெற்றியை எய்த உதவின! 

Barry Sonnenfeld முதல் மூன்று படங்களை இயக்கியிருந்தார்! இந்த 4th தவணையை,  F. Gary Gray இயக்கியுள்ளார்। 

இப்படங்களின் அடிப்படை கடை கரு என்னவென்றால், வேற்று கிரஹத்தை சேர்ந்த உயிரினங்களும் மனித இனத்துடன் இந்த பூமியில் வாழ்ந்து வருகின்றன; MIB நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகளால் மட்டுமே இந்த வேற்று கிரஹத்து உயிரினங்களோடு தொடர்பு வைத்து கொள்ள முடியும் என்பது தான்!

New York நகரம், Morocco, Italy மற்றும் London ஆகிய இடங்களில் இது படமாக்கபட்டுள்ளது ! 

UK வில் உள்ள MIB நிறுவனத்தின் தலைவர், High T (லியாம் நீசன்)। இந்நிறுவனத்தின் மற்றுமொரு முக்கிய அதிகாரி Agent H (கிறிஸ் ஹெம்ஸ் ஒர்த், Thor கதாபாத்திர புகழ் !)। புதியதாக Agent M (டெஸ்ஸா தாம்சன்) இந்நிறுவனத்தில் சேருகிறார்! 

வேற்று கிரஹ உயிரினங்கள் சில மனித குல பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் வண்ணம் சில நாச வேலைகளில் ஈடுபடுவது தெரியவர, H, மற்றும் M , இந்த தீய சக்திகளை தொடர்ந்து சென்று அழிப்பதற்காக புறப்படுகின்றனர்। 

அதி நவீன சக்திகள் கொண்ட அந்த தீய சக்திகளை அதி நவீன ஆயுதங்களின் உற்ற துணையோடு சென்று போராட தயாராகின்றனர்! 

ஸ்டுவர்ட் ட்ரைபெர்க் படத்தின் ஒளிப்பதிவை கையாண்டுள்ளார்। டேனி எல்ப்மன் மற்றும் கிறிஸ் பேகன் இசையமைத்துள்ளார்।