ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடித்துள்ள லக்‌ஷ்மி பாம் டிரெய்லர் வெளியீடு!

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடித்துள்ள லக்‌ஷ்மி பாம் டிரெய்லர் வெளியீடு!

 

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடித்துள்ள லக்‌ஷ்மி பாம் என்கிற ஹிந்திப் படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக ஓடிடி தளங்களில் நேரடியாகப் படங்களை வெளியிடத் தயாரிப்பாளர்கள் முயன்று வருகிறார்கள்.

2011-ல் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா படம் லக்‌ஷ்மி பாம் என்கிற பெயரில் ஹிந்திப் படமாக உருவாகியுள்ளது. ராகவா லாரன்ஸ் - அக்‌ஷய் குமார் முதல்முறையாக இணைந்துள்ளார்கள். கதாநாயகியாக கியாரா அத்வானி நடித்துள்ளார்.

இந்தப் படம் மே 22 அன்று வெளிவருவதாக இருந்தது. ஆனால் தற்போதைய சூழலில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகவுள்ளதாகக் கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. பாலிவுட்டில் அனைவரும் எதிர்பார்த்த ஒரு படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாவது திரையுலக வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

லக்‌ஷ்மி பாம் படம் நவம்பர் 9 அன்று முதல் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.