நித்தின் சத்யா தயாரிப்பில் “லாக்கப்”

நித்தின் சத்யா தயாரிப்பில் “லாக்கப்”
நித்தின் சத்யா தயாரிப்பில் “லாக்கப்”
நித்தின் சத்யா தயாரிப்பில் “லாக்கப்”
நித்தின் சத்யா தயாரிப்பில் “லாக்கப்”
நித்தின் சத்யா தயாரிப்பில் “லாக்கப்”

நித்தின் சத்யா தயாரிப்பில் வைபவ் – வெங்கட் பிரபு நடிப்பில் அறிமுக இயக்குனர் SG.சார்லஸ் இயக்கும் “லாக்கப்”

சினிமா கலையை கற்றதோடு நில்லாமல் அந்த கலையில் சாதிக்க துடிக்கும் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பளிப்பதில் ஆர்வம் காட்டும் தயாரிப்பாளர்களில் முக்கியமானவர் நித்தின் சத்யா.

தனது தயாரிப்பு நிறுவனமான "ஷ்வேத் - எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவுஸ்" சார்பாக நித்தின் சத்யா சென்ற வருடம் ஜெய் நடிப்பில் உருவான "ஜருகண்டி" படத்தை புதுமுக இயக்குனர் பிச்சுமணி இயக்கினார். தற்போது அவர் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இரண்டாவது படமான “லாக்கப்” படத்தை புதுமுக இயக்குனர் SG சார்லஸ் இயக்கியுள்ளார். SG சார்லஸ் இயக்குனர் மோகன்ராஜாவிடம் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியான “லாக்கப்” படத்தின் முதல் பார்வை போஸ்டர் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகும் இப்படத்தில் வைபவ் கதாநாயகனாகவும் வாணி போஜன் கதாநாயகியாகவும் நடிக்க, பிரபல இயக்குனரும் நடிகருமான வெங்கட்பிரபு முற்றிலும் மாறுபட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஈஸ்வரி ராவ்,  பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உடன் பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஆரோல் கரோலி இசையமைக்க, சாண்டி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

படத்தொகுப்பு - ஜெரால்டு ஆனந்த்
கலை - ஆனந்த் மணி
மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)

இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள படக்குழுவினர் “லாக்கப்” திரைப்படம் விரைவில் வெளியாகி ரசிகர்களுக்கு திரைவிருந்தாக அமையும் என்று கூறியுள்ளனர்.


A Nitin Sathyaa production Vaibhav- Venkat Prabhu starrer Debutant SG Charles directorial “LOCK UP”

 
Not just a passionate actor, but a producer who loves to give talented youngsters an opportunity in the industry to make a mark is actor-producer Nitin Sathyaa.

Nitin Sathyaa rolled out his maiden production venture Jarugandi last year starring Vaibhav, bankrolled by Shvedh- A Nitin Sathyaa Production House, directed by newcomer Pichumani. Now he is rolling out his second production venture “Lock Up” in a mega budget and introduces a new talent S G Charles, an associate of filmmaker Mohan Raja.

The first look poster of Lock Up has garnered attention from all quarters.

An out-and out investigative thriller, the movie has Vaibhav and Vani Bhojan in lead roles. Popular filmmaker Venkat Prabhu plays a key role. Eswari Rao and Poorna are doing meaty roles.

Music is by Aroll Corelli. Sandy cranks camera.

Editing -Jerald Anandh
Art- Anandh Mani
PRO - Sathish (AIM)

As the shoot is completed "Lock Up" will hit the screens soon.