கழுகு 2 Movie Review
Director: Sathyasiva
Cast: Krishna Sekhar
Bindu Madhavi
Kaali Venkat
Music Director: Yuvan Shankar Raja
Cinematography: Raja battacharjee
Editor: Gopi Krishna
செந்நாய் உலவும் காட்டை ஏலம் எடுப்பவர் அங்கே வேலைக்கு வரமாட்டார்கள் என்பதால் துப்பாக்கி சுடும் வேட்டையாளை வேலைக்கு வைக்க விருப்பப்படுகிறார். அதற்காக தேனியில் திருட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தும் கிருஷ்ணாவையும் காளி வெங்கட்டையும் , போலீஸ் துப்பாக்கியை திருடி ஓடும்போது பார்க்கும் எம் எஸ் பாஸ்கர் அவர்களை வேட்டையாள் என நினைத்து காட்டுக்கு கூட்டி வருகிறார். அந்த காட்டில் அவர்கள் பிழைத்தார்களா? அங்கே கிருஶ்ணாவுக்கு ஏற்படும் காதல், திருட்டு அவர்கள் வாழவை எப்படி பாதிக்கிறது என்பதே கதை.
கழுகு 1ம் பாகத்தின் களம் மாறிய மறுபதிப்பு தான் கழுகு 2. முழுப்படமும் காட்டுக்குள் நடப்பதால் காட்டின் பிரமாண்டம் படத்திற்குள்ளும் வந்து விடுகிறது. செந்நாய் கூட்டம் உலவும் காடு எனும் பில்டப்பில் படம் ஆரம்பிக்கிறது. இரண்டு காட்சிகளுக்கு பிறகு செந்நாய் காணாமல் போய் விடுகிறது. பிந்து மாதவிக்கும் கிருஷ்ணாவுக்குமான காதல் தான் படத்தின் அடிநாதம் இருவரின் கெமிஸ்ட்ரியும் அழகாக இருக்கிறது.
கிருஷ்ணா, பிந்து மாதவி இருவரும் கழுகு படத்தை பிரதிபலித்திருகிறார்கள்.
சத்ய சிவா ஆச்சர்யம் அளித்த கழுகு மூலமே மீண்டும் வருகிறார். படம் முழுதுமே தாலாட்டிக்கொண்டே இருக்கிறது. கேமரா ராஜா நாமும் காட்டுக்குள் இருப்பது போன்ற உணர்வை தந்திருகிறார். எடிட்டிங் தேவையான வேலையை செய்திருகிறது.