நாளைய இயக்குனர் சீசன் 6

நாளைய இயக்குனர் சீசன் 6

திறமைகளுக்கு தோள்கொடுக்கும்

நாளைய இயக்குனர் ​சீசன் ​6

 தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த படைப்பாளிகளான பாலச்சந்தர்பாலு மகேந்திராபாரதிராஜா போன்றோரின் அரவணைப்பில் உருவானவர்களே நேற்றைய சினிமாவை ஆண்டு வந்தனர். அந்த வகையில் சினிமாவில் சாதிக்க துடிக்கும் திறமையாளர்க்கு ஒரு புதிய பாதையை அமைத்துக் கொடுக்கும் மேடையாக நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சியை கலைஞர் தொலைக்காட்சி அறிமுகப்படுத்தியது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தனது குறும்படங்களை உலகறிய செய்த கார்த்திக் சுப்புராஜ்பாலாஜி மோகன் போன்றவர்களே இன்றைய தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களாக வலம் வருகின்றனர். இயக்குனர்கள் மட்டுமின்றி விஜய் சேதுபதிபாபி சிம்ஹா போன்ற தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்கள் பலரும்தாம் நடித்த குறும்படங்கள் மூலமே எளிதில் மக்களை சென்றடைந்ததுடன் நடிகர்களாகவும் உயர்ந்தனர். இவ்வாறாக இயக்குனர்கள்நடிகர்கள்தொழில்நுட்ப கலைஞர்கள் என சினிமாவின் பல்வேறு துறைகளை சேர்ந்த கலைஞர்களை ஊக்கப்படுத்தும் ஒரு தளமாக நாளைய இயக்குனர் என்ற மேடை விளங்கி வருகிறது.

கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்து தற்போது பிரம்மாண்டமாக தனது 6-வது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்த சீசனில் 6 தேசிய விருதுகளை வென்ற தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறனும்வெற்றிக்கொடி கட்டுஆட்டோகிராப் உள்ளிட்ட படங்களின் மூலம் மக்கள் மனதில் பதிந்த இயக்குனர் சேரனும் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர்.

 இந்த முறையும் பலதரப்பட்ட வித்தியாசமான குறும்படங்கள் உங்களை மகிழ்விக்க காத்திருக்கிறது. இதில் திறமைகளுக்கு சவால்விடும் பல்வேறு விதமான போட்டிகளில் தேர்ச்சி பெற்றுநாளைய இயக்குனர் என்ற பட்டத்தை வெல்லப்போகும் அந்த படைப்பாளி யார்?என்பதை அறிய ஞாயிறுதோறும் இரவு 8:00 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியை காணத்தவறாதீர்கள்.

 கலைஞர் தொலைக்காட்சி புத்தம் புதுபொலிவுடன் ஒளிபரப்பாகவிருக்கும் நிலையில்நாளைய இயக்குனரின் அடுத்த சீசன் ஒளிப்பரப்பாவது கூடுதல் சிறப்பு.