அஜித்துடன் நடிக்க ஆசை, அரசியலுக்கு வருவேன்: யாஷிகா ஆனந்த் பேட்டி
யோகிபாபு நடித்த ஜாம்பி' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகை யாஷிகா, தனக்கு அஜித்துடன் நடிக்க ஆசை என்றும், அரசியலுக்கு ஒருநாள் கண்டிப்பாக வருவேன் என்றும் கூறினார். ஜாம்பி திரைப்படம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நான் மிகவும் எதிர்பார்க்கும் படம். 4 மாதங்கள் இந்த படத்திற்காக கடின உழைப்பை கொடுத்துள்ளேன். இந்த படத்தில் இதுவரை நான் ஏற்காத கதாபாத்திரம். மருத்துவ மாணவியாக வருகிறேன். இந்த படத்தில் சில சண்டைக்காட்சிகளில் நானே ரிஸ்க் எடுத்து ஸ்டண்ட் செய்து இருக்கிறேன். தமிழ் சினிமாவில் எந்த நடிகையும் ரோப் இல்லாமல் சண்டைக்காட்சியில் நடித்ததில்லை. ஆனால் இந்த படத்தில் நான் நடித்துள்ளேன்' என்று கூறினார்.மேலும் அரசியலுக்கு ஒருநாள் நிச்சயம் வருவேன், எப்போது வருவேன் என்பது தெரியாது. அதேபோல் அஜித்துடன் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை என்று யாஷிகா தெரிவித்தார்.வசனங்களில் டபுள்மீனிங் என்பது எதுவுமே கிடையாது. சில வசனங்கள் குழந்தைகளுக்கு புரியாது. உங்களுக்கு புரிந்துவிட்டது என்றால் அது சிங்கிள் மீனிங் தான் என்று கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் யாஷிகா தெரிவித்தார்.