பிரதமர் மோடி வீடியோ வாயிலாக நாடு மக்களிடையே உரையாற்றிய நிலையில் நடிகர் கமல் டீவிட்

பிரதமர் மோடி வீடியோ வாயிலாக நாடு மக்களிடையே உரையாற்றிய நிலையில் நடிகர் கமல் டீவிட்

கொரோனாவைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருந்தார் நம் பிரதமர் நரேந்திர மோடி,இந்த உத்தரவு அமலுக்கு வந்து இன்று ஏப்ரல் 3ஆம் தேதியோடு 10 நாட்கள் ஆகிவிட்டது.

வீட்டில் இருந்தாலும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். கொரோனா தொற்றின் இருளை வெளிச்சம் கொண்டு விரட்ட வேண்டும்.

வருகிற ஏப்ரல் 5-ல் இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் உங்கள் வீட்டு விளக்கை அணையுங்கள்.

அதற்கு பதிலாக டார்ச், அகல்விளக்கை ஏற்றவேண்டும்.” என பேசியிருந்தார் மோடி.

இந்த நிலையில் மோடியின் பேச்சுக்கு தற்போது இதை பற்றி tweet செய்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

அதில்….

பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன். பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழைமக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்.