Due to outbreak of Pandemic Corona Virus shutting down the theatres Dharala Prabhu movie re-releases
இன்று உலகையே கரோனா வைரஸ் (CoVid-19) பாதிப்பு ஸ்தம்பித்துப் போக செய்திருக்கிறது. தற்போதைய சூழலில் அனைவரும் பாதுகாப்புடன் இருக்கும் வகையில் நம் நாடு, உலக அளவில் அரசாங்க அமைப்புகள் எடுத்து வரும் முயற்சிகள் பெரிதும் பாராட்டுதலுக்குரியது. கடந்த வாரத்தில் வெளியாகி, உங்களது பேராதரவைப் பெற்ற எங்கள் 'தாராள பிரபு' திரைப்படத்தின் திரையிடல் அரசாணைகளுக்கு இணங்க, மார்ச் 31ம் தேதி வரை நிறுத்திவைக்கப் படுகிறது.
எங்களது 'தாராள பிரபு' திரைப்படத்திற்கு நீங்கள் அளித்து வந்த போற்றுதலுக்குரிய அன்பிற்கும் ஆதரவுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இந்த இக்கட்டான சூழலை கடந்தபின், அதன் மறுவெளியீட்டின் போதும், உங்களது மேலான ஆதரவை எதிர்நோக்குகிறோம்.
அனைவரும் பாதுகாப்புடன் இருக்க இறையருள் துணை நிற்கட்டும்