சிங்கப்பூரில் டி இமான் இசை நிகழ்ச்சி

சிங்கப்பூரில் டி இமான் இசை நிகழ்ச்சி
சிங்கப்பூரில் டி இமான் இசை நிகழ்ச்சி

சிங்கப்பூரில் டி இமான் இசை நிகழ்ச்சி

 சிங்கப்பூரில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இசை நிகழ்வை பற்றி இன்று பார்க் ராயல் நட்சத்திர விடுதியில் டி இமான் அவர்களின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. அதில் 'இசை நிகழ்வு மட்டுமல்லாமல் இந்நிகழ்வை காண வரும் மக்கள் ஏதாவது ஒரு வழியில் முன்னேற உத்வேகம் உள்ள மாதிரி நிகழ்ச்சி அமையும்' என திரு. டி இமான் தெரிவித்தார். சிங்கப்பூரில்  கடந்த முறை நடந்த நிகழ்ச்சியை விட இந்த முறை வேறு ஒரு பரிமாணத்தில் இருக்கும் எனவும், சிங்கப்பூர் மக்கள் அதை விரும்பும் வகையில் நிகழ்ச்சி அமைய உள்ளது எனவும், இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த திரு. அருமை சந்திரன் உண்மையிலேயே பெயருக்கு ஏற்றார் போல் அருமையானவர் என செய்தியாளர் சந்திப்பில் திரு. டி இமான் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த எடிசன் விருது குழு தலைவர் செல்வகுமார் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கௌரவிக்கப்பட்டார்.