’ஏ.ஆர்.எம்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’ஏ.ஆர்.எம்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
’ஏ.ஆர்.எம்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’ஏ.ஆர்.எம்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

‘அஜயண்டே ரெண்டாம் மோஷனம்’ என்ற மலையாள தலைப்பின் சுருக்கம் தான் ‘ஏ.ஆர்.எம்’.

இந்த படம் 1900, 1950, 1990 ஆகிய மூன்று காலகட்டத்தில் நடந்த கதையா படமாக்கப்பட்டிருக்குது.

அரசு பணிக்காக தேர்வு எழுதிட்டு காத்துக்கிட்டு இருக்கும் நாயகன் டோவினோ தாமஸ் (அஜயன்) அவருடைய தாத்தா, ஊர் கோவிலில் இருக்கிற பழம்பெரும் அதிசய விளக்கை திருட முயன்றதால் அஜயனையும் மக்கள் திருடனாக பர்த்து அவமானப்படுத்துறாங்க. 

இதுக்கு நடவிலே அதிசய விளக்கு பற்றி ஆவணப்படம் எடுக்க அந்த ஊருக்கு வரும் ஹரிஷ் உத்தமன், அந்த விளக்கை திருட திட்டம் போடுகிறார். அந்த வேலையை டோவினோ தாமஸ் மூலமாகவே செய்யவும் முயற்சிக்க, அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை ரொம்ப சுவாரஸ்யமாக, எல்லாருக்கும் ரசிக்கிற மாதிரி சொல்வது தான் ‘ஏ.ஆர்.எம்’ படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் டோவினோ தாமஸ், காதல், வில்லத்தனம், இயலாமை என அனைத்தையும் அமர்க்களமாக வெளிப்படுத்தி நடிச்சிருக்கார். குஞ்சிக்கெழு என்ற கதாபாத்திரத்தில் வீரமும், விவேகமும் நிறைந்த மனிதராக நடிப்பில் நிதானத்தை வெளிப்படுத்தியிருப்பவர், மணியன் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கார். இப்படி மூன்று கதாபாத்திரங்களிலும் தோற்றம் மூலமாக வெளிக்காட்டிய வேறுபாடுகளை விட, நடிப்பு மூலம் டோவினோ தாமஸ் வெளிக்காட்டியிருக்கும் வேறுபாடு படத்துக்கே பெரிய பலம் சேர்த்திருக்குது.

நாயகிகளாக நடிச்ச கிரித்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி மூன்று பேரும் மூன்று காலக்கட்டத்திற்கு ஏற்ற தேர்வாக இருப்பதோடு, அளவாகவும் நடித்திருக்கிறார்கள். 

பசில் ஜோசப், ரோஹினி, ஷரிஷ் உத்தமன், நிஷ்தர் சையத், ஜெகதீஷ், சுதீஷ் என எல்லாரும் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடிச்சு இருக்காங்க. 

திபு நிணன் தாமஸின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது. குறிப்பாக மூன்று காலக்கட்டத்தையும் தனது பின்னணி இசை மூலம் வேறுபடுத்தி காட்டியிருக்கிறார். 

ஒளிப்பதிவாளர் ஜோமன் டி.ஜான் அழகான கேரளாவை கூடுதல் அழகு சேர்க்கும் விதத்தில் காட்சிகளை படமாக்கியிருக்கார். படத்தொகுப்பாளர் சமீர் மொஹமத், மூன்று கதாபாத்திரங்களையும், மூன்று காலக்கட்டங்களையும் குழப்பம் ஏற்படத வகையில் காட்சிகளை தொகுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சண்டைக்காட்சிகளை வடிவமைத்த விக்ரம் மோர், பினிக்ஸ் பிரபு மற்றும் களரி சண்டை காட்சியை வடிவமைத்த பி.வி.சிவக்குமார் குருக்கள் பணி குறிப்பிடத்தக்க வகையில் படத்தில் அமைந்திருக்கிறது.

ரமேஷ், அகரன், கைலாஷ் ஆகியோரது வசனங்கள் மிக எளிமையாகவும், சுருக்கமாகவும் இருக்கிறது. 

படத்தை இயக்கிய ஜிதின் லால், ஒரு விளக்கை மையமாக வைத்துக் கொண்டு ஒரு சுவாரஸ்யமான ஃபேண்டஸி ஜானர் திரைப்படத்தை எந்தவித சேதாரம் இன்றி கொடுத்திருக்கிறார்.  படத்தின் இறுதிக் காட்சியில் ஊர் மக்கள் டோவினோ தாமஸை துரத்தும் காட்சி சற்று ஜவ்வாக இழுக்கப்படுவது மட்டும் சற்று குறையாக இருந்தாலும், அதை தவிர்த்து விட்டு பார்த்தால் ‘ஏ.ஆர்.எம்’ திரைப்படம் அனைத்து வயதினரையும் நிச்சயம் ரசிக்க வைக்கும்.

முதல் படத்திலேயே கதை சொல்லல் மற்றும் காட்சி வடிவமைப்புகள் மூலம் ரசிகர்களின் கனவத்தை ஈர்த்ததோடு, மேக்கிங் மூலமாகவும் முத்திரை பதித்திருக்கும் இயக்குநர் ஜிதின் லாலுக்கு சென்னை பத்திரிகாவின் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.