பாஜகவின் காயத்ரி ரகுராமின் விதிகளை மீறியதற்காக ட்விட்டர் கணக்கு முடக்கம்!!

சென்னை : விதிகளை மீறியதற்காக பாஜக தமிழக பிரிவு கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் காயத்ரி ரகுராமின் கணக்கை ட்விட்டர் தடை செய்தது .பிரபல நடிகையும், நடன இயக்குனர் ரகுராமின் மகளுமான காயத்ரி ரகுராம் கடந்த 2014ம் ஆண்டில் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இதன் பின்னர் கடந்த 2015ல் தமிழக பாஜக கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் மனு சாஸ்திரம் பற்றி கருத்து தெரிவித்திருந்தார் விடுதலைகட்சித் தலைவரான திருமாவளவன்..அவரது கருத்துக்கு காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். .

இதற்கிடையே கடந்த 25 –ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அவரது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. டுவிட்டர் கணக்கு சட்டதிட்டங்களை மீறியதாக அவர் மீது குற்றம் சாட்டபட்டது. இதன் பின்னர் காயத்ரி ரகுராம் இணைய தள குழுவை தொடர்பு கொண்டு நடந்த நிகழ்வுகளை விவரித்தார். இதன் பின்னர் அன்று மாலை 3.51 மணிக்கு அவரது டுவீட்டர் கணக்கு மீண்டும் செயல்படத் தொடங்கியது.ட்விட்டர் விதிகளை மீறி சாதி வழிகளில் அவரது நூல்களுக்காக காயத்ரியின் கணக்கு கடந்த ஆண்டு இடைநிறுத்தப்பட்டது. விதிகளின்படி, ஒரு கணக்கு அச்சுறுத்தல்களை அனுப்புவது போன்ற “தவறான நடத்தைகளில்” ஈடுபட்டால், அதுவும் புகாரளிக்கப்பட்டால், கணக்கு இடைநிறுத்தப்படும்.