நடிகர் விஷால் பல பெண்களை ஏமாற்றி இருக்கிறார் - நடிகை ஸ்ரீரெட்டி

நடிகர் விஷால் பல பெண்களை ஏமாற்றி இருக்கிறார் - நடிகை ஸ்ரீரெட்டி

நடிகர் விஷால் பற்றி ஸ்ரீரெட்டி கூறியிருப்பதாவது:-

விஷால் பல பெண்களை ஏமாற்றி இருக்கிறார் என்று எனக்கு தெரியும். இதை நிரூபிக்கவும் முடியும். இல்லை என்று விஷாலால் நிரூபிக்க முடியுமா? விஷால் நடிகர் சங்க தேர்தலில் ஓட்டு கேட்டு வருகிறார்.

அவருக்கு ஓட்டு அளிப்பதற்கு முன்னர் அவர் எப்படிப்பட்டவர் என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். விஷால் மிகப்பெரிய ஏமாற்றுவாதி. அவருக்கு உண்மையாகவே தைரியம் இருந்தால் எந்த பெண்ணையும் ஏமாற்றவில்லை என்பதை நிரூபிக்கட்டும்.

என் அம்மாவின் மீதும், எனது தொழிலின் மீதும் சத்தியமிட்டு கூறுகிறேன். நீங்கள் என் வாழ்க்கையை அழித்தாலும் சரி அல்லது என்னைக் கொன்றாலும் சரி, அப்போதும் நான் சொல்வேன் விஷால் ஒரு ஏமாற்றுக்காரர்தான்.

விஷாலின் படங்களில் நடிக்க வேண்டும் என்றால் எந்த பெண்ணும் அவருடன் அனுசரித்து செல்ல வேண்டும். இதை எங்கு வேண்டுமானாலும் வந்து சொல்வேன். இதுபோன்ற வி‌ஷயங்களுக்காகவே ஒரு குரூப்பை விஷால் வைத்துள்ளதும் எனக்குத் தெரியும்.

அவர்கள் யார் என்பதும் எனக்கு தெரியும். இனியும் உங்கள் கோர முகத்தை நீங்கள் மறைத்து எல்லோரையும் ஏமாற்ற முடியாது. விஷாலுக்கு ஓட்டு போடாதீர்கள்.

இவ்வாறு ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.