நடன இயக்குனர் ராதிகா அவர்களின் தாயார் சீதாலட்சுமி அம்மையார் காலமானார்
தாரை தப்பட்டை, கண்ணே கலைமானே, மாமனிதன் படங்களில் நடன இயக்குநரான தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற ராதிகா அவர்களது தாயாரும், எம் ஜி ஆர், சிவாஜி ஆகியோருடன் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவருமான கலைமாமனி திருமதி சீதாலட்சுமி அம்மையார் நேற்று மாலை 6 மணி அளவில் இறைவனடி சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். பர்மாவில் பிறந்த சீதாலட்சுமி தமிழகத்தில் வளர்ந்தவர். இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் பங்கு கொண்டவர் என்பது ஆச்சரியப்படக் கூடிய ஒரு விஷயம. திரையுலகில் இவரது சாதனைகளுக்காக கலைமாமணி கலைச்செல்வி என்கிற பல பட்டங்களை புரட்சித்தலைவர் எம்ஜிஆர, புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரின் கரங்களால் பெற்றவர. தந்தை பெரியார் விருது பெற்ற பெருமைக்குரியவர்.
அம்மையாரது இறுதிச்சடங்கு இன்று மாலை 4 மணியிலிருந்து 5 மணிக்கு விருகம்பாக்கம் மயானத்தில் நடைபெற உள்ளது...