விஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் T.D ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது

விஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் T.D ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது

காந்தக்கோட்டை ,வல்லக்கோட்டை ஆகிய படங்களின் தயாரிப்பிற்கு பிறகு TD ராஜா தயாரிக்கும்  ராஜவம்சம்  திரைப்படம் விரைவில்  வெளியாக இருக்கிறது .இதைத்தொடர்ந்து  இவர் தயாரிக்கும் பெயரிடாத படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடிக்கிறார் .

"மெட்ரோ " பட புகழ்  இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார் .

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வழங்க  Dr . தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார் .

உரு படத்திற்கு இசையமைத்த ஜோகன் என்பவர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். N .S உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்  .இணை தயாரிப்பு - ராஜா சஞ்சய் .

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது .

இயக்கம் - ஆனந்த கிருஷ்ணன்
தயாரிப்பு - T D ராஜா
இணைத்தயாரிப்பு - ராஜா சஞ்சய்
இசை - ஜோகன்
ஒளிப்பதிவு - N S உதயகுமார்
மக்கள்தொடர்பு - ரியாஸ் கே அஹமது