கலைஞர் டிவி புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் 2020!!

கலைஞர் டிவி புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் 2020!!
கலைஞர் டிவி புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் 2020!!

பல நீங்கா நினைவுகளுடன் 2019 இனிதே நிறைவுறும் நிலையில், 2020-ஆம் ஆண்டு, புத்தம் புதிய நிகழ்ச்சிகள், சூப்பர்ஹிட் திரைப்படங்கள் என களைகட்டத் தொடங்கியுள்ளது. இதில் ஜனவரி 1 முதல் நாளன்று, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் உங்களை மகிழ்விக்க இருக்கிறது கலைஞர் தொலைக்காட்சி.

அதன்படி காலை 6:00 மணிக்கு மங்கள இசைக் கச்சேரியுடன் நாள் இனிதே துவங்க, காலை 8 மணிக்கு சிறப்பு பேச்சாளர்கள் பங்கேற்று இன்றைய நவீன வாழ்க்கைக்கு தேவையானவற்றை விளக்கும் "அறம் பொருள் இன்பம்" சிறப்பு நிகழ்ச்சியும், காலை 9 மணிக்கு "இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்" படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்த நாயகி "ஷில்பா மஞ்சுநாத்" பங்குபெறும் "நம்ம வீட்டு நட்சத்திரம்" நிகழ்ச்சியும் ஒளிபரப்பாக இருக்கிறது.

தொடர்ந்து காலை 10:00 மணிக்கு "வாழ்வில் இனிமை சேர்ப்பது எது?" என்ற தலைப்பில் திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் "சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றமும்",  காலை 11:00 மணிக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில், சூப்பர் ஹீரோ வேடமிட்டு சிங்கப்பூர் தீபன், முல்லை, கோதண்டம் உள்ளிட்ட காமெடிக் குழுவினரின் இடைவிடாத சிரிப்பு சரவெடி "அவெஞ்சர்ஸின் தில்லு முல்லுவும்" ஒளிபரப்பாக இருக்கிறது.

பகல் 12:00 மணிக்கு 2019-ல் அறிமுகமான நடிகர், நடிகைகள் இணைந்து புத்தாண்டை கொண்டாடிய "வரலாம் வா 2020", கலகலப்பான சிறப்பு நிகழ்ச்சி மற்றும் 2019-ன் சிறந்த 10 படங்கள் எது?, இளைஞர்கள் தேர்ந்தெடுக்கும் 2019-ன் கனவுக் கன்னியை யார்? உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் இடம்பெறவிருக்கிறது.

மதியம் 2.30 மணிக்கு நடிகர்கள் சரண், கிஷோர், பிரித்விராஜன், ஸ்ரீராம், பாண்டி மற்றும் நடிகை ஐரா என இளம் நட்சத்திரங்கள் நடிப்பில் நட்பை மையப்படுத்தி கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற "சகா" திரைப்படம், உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளையும் கலைஞர் தொலைக்காட்சியில் கண்டு மகிழுங்கள். இந்த புத்தாண்டு இனியதாக அமைய வாழ்த்துக்கள்.