ஷ்யாம் பிரவீன் இயக்கத்தில் நடிகர் வெற்றி

ஷ்யாம் பிரவீன் இயக்கத்தில் நடிகர் வெற்றி

2 தயாரிப்பு நிறுவனங்களுடன் தனது அடுத்த பயணத்தைத் துவங்கும் 'ஜீவி' படப்புகழ் நடிகர் வெற்றி 

'8 தோட்டாக்கள்' மூலம் அறிமுக நாயகனாக தனது திரைப் பயணத்தைக் துவங்கினார் நடிகர் வெற்றி. அறிமுகமான முதல் படத்திலேயே நல்ல நடிகர் என்று விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டார். இரண்டாவது படமான 'ஜீவி'-யில் கதையின் நாயகன் என்று பெயரும் பெற்றார். இந்த இரண்டு படங்களுமே அவரது சொந்த தயாரிப்பில் உருவானது.

இதனையடுத்து, அஸ்வமேதா புரொடக்ஷன்ஸ் மற்றும் மேக்னம் மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமிட்டிருக்கிறார்.

ஷ்யாம் பிரவீன் கதை எழுதி இயக்க, விபின், கிருஷ்ணன் மற்றும் ஷ்யாம் பிரவீன் வசனம் எழுதுகிறார்கள். பைசில் வி காலித் ஒளிப்பதிவு செய்கிறார். 

கதாநாயகனாக வெற்றி நடிக்க, மேக்னா சலில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.