பிரபல இந்தி நடிகர் ரிஷிகபூர் புற்றுநோய் காரணமாக, தனது 67-ம் வயதில் இன்று மரணம் அடைந்தார்
*100 படங்களுக்கு மேல் நடித்தவர்..!
* இந்திப் படவுலகின் மெகா புரொட்யூஸர்-டைரக்டர் ராஜ் கபூரின் மகன் இவர். ' மேரா நாம் ஜோக்கர் ' படத்தில் இளம் வயது ராஜ் கபூராக நடித்து 1970-ம் வருடம் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது வாங்கியவர்.
* 1973-ம் வருடம் ' பாபி ' மெகா ஹிட் படத்தில் ஹீரோவாக டிம்பிள் கபாடியா ஜோடியாக ராஜ்கபூரால் அறிமுகப்படுத்தப்பட்டார்.
* இவருடைய மனைவி நடிகை நீட்டு சிங்-டன் 12 படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
* ரிஷிகபூரின் மகன் தற்போதைய இந்திப் படவுலகில் ' லீடிங் ஸ்டார் ' ரன்பீர் கபூர்..!