தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்று சாதித்த பிரபல தமிழ் நடிகரின் மகள்

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்று சாதித்த பிரபல தமிழ் நடிகரின் மகள்

தமிழ், தெலுங்கு,  மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தனது யதார்த்தமான நடிப்பால் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தலைவாசல் விஜய். இவர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான '100 பெர்சன்ட் காதல்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நீச்சல் வீரரான இவரது மகள் ஜெயவீனா தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை புரிந்துள்ளார். குறிப்பாக தனது 12 வயதில், இள வயது நீச்சல் வீராங்கனையாக தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார்.

இந்நிலையில் ஜெயவீனா தற்போது நேபாளம் நாட்டில் உள்ள காத்தமண்டுவில் நடைபெற்ற 13 வது தெற்காசிய விளையாட்டு போட்டியில் 50 மீ breast stroke கேட்டகிரியில் சில்வர் மெடல் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.