மனைவி ராதிகாவுக்காக சொந்த குரலில் கண்ணு தங்கம் பாடும் சரத்குமார்

  மனைவி ராதிகாவுக்காக சொந்த குரலில் கண்ணு தங்கம் பாடும் சரத்குமார்

சரத்குமார், விக்ரம் பிரபு பிரதான வேடங்களில் நடிக்கும் வானம் கொட்டட்டும் படத்தில் சிட் ஸ்ரீராம் இசையமைத்த இரண்டு பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ஹிட் அடித்தது.

இதில் முதல் பாடலான ’கண்ணு தங்கம் ராசாத்தி’ பாடலை சிட் ஸ்ரீராமும், சக்திஶ்ரீ கோபாலனும் இரண்டாம் பாடலான ‘ஈசி கம் ஈசி கோ’வை சிட் ஸ்ரீரம், சஞ்சீவ், எம்ஏடிஎம், தபாஸ் நரேஷ் ஆகியோரும் பாடி இருந்தனர்.

மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் படத்தை தாயாரிக்கும் இயக்குநர் மணிரத்னம் படத்துக்கு கதையும் எழுதி உள்ளார். அவரது உதவியாளரான தனா இயக்கும் இப்படத்தில் ராதிகா, சாந்தனு, மடோனா செபாஸ்டியன் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.

தற்போது மெட்ராஸ் டாக்கீஸ் தன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில்  நடிகர் சரத்குமார் தன்  மனைவி ராதிகாவோடு தோன்றி கண்ணு தங்கம் ராசாத்தி பாடலின் சில வரிகளை பாடியிருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.