அமீரின் "நாற்காலி" படத்தில் இணைந்த வடசென்னை மற்றும் அசுரன் பிரபலம்

அமீரின் "நாற்காலி" படத்தில் இணைந்த வடசென்னை மற்றும் அசுரன் பிரபலம்

இயக்குநரும் நடிகருமான அமீர் ஹீரோவாக நடிக்கும் நாற்காலி படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்குவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.மெளனம் பேசியதே படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அடியெடுத்து வைத்த அமீர், ராம், பருத்திவீரன் ஆகிய படங்கள் மூலம் கவனம் பெற்றார். பின்னர் யோகி, வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியான வட சென்னை படங்களில் நடித்த அவர் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றார்.

தற்போது இவர் நாற்காலி என்னும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். வி.இசட்.துரை இயக்கும் இப்படத்தை மூன் பிக்சர்ஸ் ஆதம் பாவா தயாரிக்கிறார்.

அரசியலை மைய்யப்படுத்தி உருவாகும் இப்படத்தில் அமீர் ஒரு அரசியல்வாதியாக நடிக்கிறார். மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அஜயன் பாலா வசனம் எழுதும் இப்படத்துக்கு கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில்  இயக்குனர் சுப்ரமணிய சிவா இணைந்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இவர் வடசென்னை, அசுரன் படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.