அசுரன் பட திரைவிமர்சனம்

அசுரன் பட  திரைவிமர்சனம்
அசுரன் பட  திரைவிமர்சனம்
அசுரன் பட  திரைவிமர்சனம்

directed by:vettrimaran
Starring    :Dhanush,Manju Warrier
Music by  :  G. V. Prakash Kumar
Cinematography  :  Velraj
Edited by :   R. Ramar
Production company:V Creations
Release date:4 October 2019[1]
Country:    India
Language :Tamil

வடக்கூடாரானுக்கும் சிவசாமிக்கும் இடையே நிலத்தகராறு. சிவசாமியின் மூத்த மகன் முருகன் கொல்லப்பட அதற்கு பழி தீர்க்க இளைய மகன் சிதம்பரம் வடக்கூரானை கொலை செய்ய அதற்கு பழிக்குப் பழி வாங்க வடக்கூரானின் ஆட்கள் கத்தியை தூக்க பரபரப்பாக டாப் கியரில் கிளம்புகிறது அசுரன்.

பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக வைத்து உருவாகி உள்ள அசுரன் படத்தில் அப்பா, மகன் என்று இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார் தனுஷ்.

கோவில்பட்டி கதைக்களம். சாதிய வன்மத்தால் இரு பிரிவினர்களுக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளை மிகவும் அழகாக படமாக்கியுள்ள வெற்றிமாறனுக்கு ஒரு பலத்த கைதட்டல் கொடுத்தே ஆக வேண்டும். ஆனால் எந்த இடத்திலும் ஜாதி என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் எடுத்ததற்காக வெற்றிமாறனுக்கு ஒரு சபாஷ் போடலாம்.

சிவசாமி தனுஷின் மனைவியாக, பச்சையம்மாளாக வாழ்ந்திருக்கிறார் மஞ்சு வாரியார். இந்த தம்பதியினருக்கு இரு மகன்கள், ஒரு மகள் என அழகான குடும்பம். இந்த சாதாரண குடும்பம் எப்படி கொலை, இடப்பிரச்சனை, ஜாதி வேறுபாடு, வன்மம் போன்ற பல பிரச்சனைகளால் சின்னா பின்னமாகிறது என்பது தான் கதை.