பிரபல பாடலாசிரியர் முத்து விஜயன் காலமானார்

பிரபல பாடலாசிரியர் முத்து விஜயன் காலமானார்

பிரபல திரைப்பட பாடலாசிரியர் முத்து விஜயன்(48) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகவும், தமிழ் திரைப்பட பாடலாசிரியராக இருந்தவருமான முத்து விஜயன் மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.

பாடலாசிரியர் சங்கம் மூலம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி முத்து விஜயன் நேற்று மாலை உயிரிழந்தார்.அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் "மேகமாய் வந்து போகிறேன்" என்ற பாடலையும், பெண்ணின் மனதைத் தொட்டு படத்தில் "கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்" பாடல் மற்றும் கள்வனின் காதலி, தென்னவன், நெஞ்சினிலே, வல்லதேசம் உள்ளிட்ட படங்களிலும் பாடல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கவிஞர் தேன்மொழியை திருமணம் செய்து பினனர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.