இன்று ஒரே நாளில் ஐந்து படங்களின் டீசர், டிரைலர், சிங்கிள் ரிலீஸ்!

இன்று ஒரே நாளில் ஐந்து படங்களின் டீசர், டிரைலர், சிங்கிள் ரிலீஸ்!

கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு வாரமும் 4 அல்லது 5 திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் அதே போல் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்களின் புரோமோஷன்களும் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று ஒரு நாளில் மட்டும் 5 திரைப்படங்களின் புரோமோஷன்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தனுஷ் நடித்த 'அசுரன்' படத்தின் சிங்கிள் பாடலான கத்தரிப்பூ அழகே என்ற பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது. அதே போல் சிவகார்த்திகேயன் நடித்த .நம்ம வீட்டு பிள்ளை. படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான .மைலாஞ்சி. என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.

மேலும் பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி வரும் 'இரண்டாம் உலகப் போரின் முதல் குண்டு' என்ற திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. அதேபோல் 'திட்டம் போட்டு திருடுற கூட்டம்' என்ற படத்தின் டிரெய்லரும் 6 மணிக்கு வெளியாக உள்ளது. மேலும் சிபிராஜ் நடித்து வரும் 'ரங்கா' படத்தின் டீசர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.                 கோலிவுட் திரையுலகில் திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதில் தான் போட்டி என்றால் தற்போது புரோமோனிலும் போட்டி அதிகமாகியுள்ளது. ஒரே நாளில் ஐந்து படங்களின் புரமோஷன்கள் வெளியாகயுள்ளதால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் .