விலையில்லா விருந்தகம்: விஜய் ரசிகர்களின் அசத்தல் முயற்சி!

விலையில்லா விருந்தகம்: விஜய் ரசிகர்களின் அசத்தல் முயற்சி!
விலையில்லா விருந்தகம்: விஜய் ரசிகர்களின் அசத்தல் முயற்சி!
விலையில்லா விருந்தகம்: விஜய் ரசிகர்களின் அசத்தல் முயற்சி!

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான விஜய்யின் பிறந்தநாள் கடந்த மாதம் கொண்டாடப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் சென்னையில் உள்ள உணவகம் ஒன்று விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு வருடத்திற்கு தினமும் 109 நபர்களுக்கு இலவச காலை உணவு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

வடசென்னையில் உள்ள கொருக்குப்பேட்டையில் உள்ள இந்த உணவகம் இவ்வாறு அறிவித்துள்ளதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தளபதி விஜய் அவர்களின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு வருடம் முழுவதும் தினமும் 109 நபர்களுக்கு மட்டும் விலையில்லா உணவு வழங்கப்படும் என்றும் இந்த விலையில்லா உணவு காலை 7.35 மணி முதல் 8.35 மணி வரை வழங்கப்படும் என்றும் அறிவிப்பு பலகை ஒன்றையும் வைத்துள்ளது.

விஜய் ரசிகர்களின் இந்த அறிவிப்பினால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.