ஸ்டார் "தர்பார்" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

ஸ்டார் "தர்பார்" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!
ஸ்டார் "தர்பார்" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

பேட்ட' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தர்பார்'. இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன் சார்பாக சுபாஷ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.தளபதிக்கு பிறகு இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இணைந்துள்ளார். சமீபத்தில் எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடைபெற்றுவருகிறது. இது பாடல் படப்பிடிப்பு என்று கூறப்படுகிறது. இதனையடுத்து விமானத்தில் நயன்தாராவும் ரஜினிகாந்தும் அருகே அமர்ந்திருந்த ஃபோட்டோ சமீபத்தில் வைரலானது.        
இந்நிலையில்  இப்படத்தின் தெலுங்கு உரிமையை பிரபல வினியோகஸ்தர் NV. பிரசாத் கைப்பற்றியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனத்தின் சார்பில் தெலுங்கில் இப் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார் என்று எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.