அடுத்தபடியாக 25வது தினத்தில் அடியெடுத்து வைக்கும் தளபதியின் பிகில் திரைப்படம் ; அமர்களப்படுத்தும் முக்கிய திரையரங்கம்
அதிக எதிர்பார்ப்பில் விஜய்யின் திரைப்பயணத்தில் கூடுதல் பட்ஜெட்டில் தயாராகியுள்ள படம் தான் பிகில்.ரூ. 180 கோடி செலவில் உருவான இந்த படம் இப்போது ரூ. 300 கோடியை அடைய இருக்கிறது. ஒவ்வொரு நாளும் படத்தின் வசூல் கூடிக்கொண்டு வருகிறது. தீபாவளிக்கு ரிலீசான இந்த படம் தமிழ்நாட்டை தாண்டி கேரளா, ஆந்திரா என அங்கேயும் வசூல் வேட்டை நடத்துகிறது . இன்றோடு படம் வெளியாகி 25வது நாளை தொட்டு விட்டது. தங்களது திரையரங்கில் பிகில் வெற்றிகரமான 25வது நாள் என ராம் முத்துராம் சினிமாஸ் டுவிட்டரில் பதிவு போட்டுள்ளார்கள் . அதனோடு இந்த நாளை பிரத்யேக கொண்டாட்டத்துடன் அமர்களப்படுத்த போகிறார்களாம் .
 
                        
                    
                    
                    
                    


        
        
                        
                        
                        
                        
                        
        
        
        
        
        