பூமியைக் காக்கும் திருவிழா" Friday For Farmers

பூமியைக் காக்கும் திருவிழா" Friday For Farmers
பூமியைக் காக்கும் திருவிழா" Friday For Farmers

                                                  "பூமியைக் காக்கும் திருவிழா"

Friday For Farmers 

சத்தியம் தொலைக்காட்சி, சத்தியம் அறக்கட்டளை மூலம் வெள்ளிக்கிழமை தோறும் விவசாயிகளுக்கான இயக்கத்தை தொடங்குகிறது.

நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் குரல் கொடுக்க தனித்து நிற்கும் சத்தியம் டிவி, தற்போது சத்தியம் அறக்கட்டளை மூலம் "Friday For Farmers" என்ற இயக்கத்தை வெள்ளிக்கிழமை தோறும் விவசாயிகளுக்காக தொடங்கியுள்ளது. ஏற்கன்வே சத்தியம் அறக்கட்டளை "பூமியைக் காக்கும் திருவிழா" என்ற இயக்கம் மூலம் தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மரக்கன்றுகளை நட்டு அதை மரமாக வளர்த்து பராமரித்து பல பாராட்டுகளை பெற்று வருகிறது. "Friday For Farmers" என்ற இயக்கம் வெள்ளிக்கிழமை தோறும் விவசாயிகளுடன் இணைப்புப் பாலமாக நின்று அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுவதாகும். "Friday For Farmers" இயக்கம் மூலம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விவசாயிகளுக்காக நாள் முழுவதும் விவசாயத்தைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும், அவர்களின் வாழ்வில் ஒளியேற்றவும் விவசாயம் சார்ந்த செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் விவாதங்களில் கவனம் செலுத்தும்.

 இந்த "Friday For Farmers" இயக்கம் குறித்து பேசிய சத்தியம் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் டாக்டர். ஐசக் லிவிங்ஸ்டோன், விவசாயம் என்ற பெயரில் கொள்ளையடிக்கும் மோசடி கும்பலை அடையாளம் காணவே இந்த முயற்சி என்றார். அடித்தட்டு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை மோசடி செய்து அனுபவிக்கும் போலி விவசாயிகளை அம்பலப்படுத்துவது மட்டுமல்லாமல், உண்மையான விவசாயிகளுக்கு தேவையான உரிமைகளை சரியான நேரத்தில் பெறுவதற்கு வழிகாட்டுவோம். விவசாயிகளுக்கும், அரசுக்கும் இணைப்பு பாலமாக இருப்பதால், பார்வையாளர்கள் விவசாயத்தையும் விவசாயிகளையும் எவ்வாறு செழிக்கச் செய்வது குறித்து இந்த நிகழ்ச்சி இருக்கும். விவசாயிகளுக்கான "Friday For Farmers" இயக்கத்திற்கான 87544 48755 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தங்கள் ஆலோசனைகளை அனுப்புவதன் மூலம் இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக நேயர்கள் இருக்கலாம். இந்த இயக்கம் விவசாயிகளைளின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்கும் வகையில், அரசாங்கத்தையும், அரசின் கொள்கைகளையும் ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்டு தீர்வு காண முயற்சி செய்யும் . சத்தியம் டிவியின் "Friday For Farmers" இயக்கம், பிரச்சனைகளை சுட்டிக் காட்டுவது மட்டுமின்றி, பிரச்சனைகளுக்கு தீர்வுகளையும் வழங்கும். பயிர் வளர்ப்பு மட்டுமின்றி கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பால் பண்ணை போன்ற அனைத்து வகை விவசாயிகளும் பயன்பெறும் வகையில் ஆலோசனைகளை வழங்கும். சத்தியம் டிவியின் "Friday For Farmers" நிகழ்ச்சி மக்கள் இயக்கமாகவும், மௌனப் புரட்சியாகவும் இருக்கும்.

சத்தியம் தொலைக்காட்சி, சத்தியம் அறக்கட்டளை மூலம் வெள்ளிக்கிழமை தோறும் விவசாயிகளுக்கான இயக்கத்தை தொடங்குகிறது

 நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் குரல் கொடுக்க தனித்து நிற்கும் சத்தியம் டிவி, தற்போது சத்தியம் அறக்கட்டளை மூலம் "Friday For Farmers" என்ற இயக்கத்தை வெள்ளிக்கிழமை தோறும் விவசாயிகளுக்காக தொடங்கியுள்ளது. ஏற்கன்வே சத்தியம் அறக்கட்டளை "பூமியைக் காக்கும் திருவிழா" என்ற இயக்கம் மூலம் தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மரக்கன்றுகளை நட்டு அதை மரமாக வளர்த்து பராமரித்து பல பாராட்டுகளை பெற்று வருகிறது. "Friday For Farmers" என்ற இயக்கம் வெள்ளிக்கிழமை தோறும் விவசாயிகளுடன் இணைப்புப் பாலமாக நின்று அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுவதாகும். "Friday For Farmers" இயக்கம் மூலம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விவசாயிகளுக்காக நாள் முழுவதும் விவசாயத்தைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும், அவர்களின் வாழ்வில் ஒளியேற்றவும் விவசாயம் சார்ந்த செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் விவாதங்களில் கவனம் செலுத்தும்.

 இந்த "Friday For Farmers" இயக்கம் குறித்து பேசிய சத்தியம் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் டாக்டர். ஐசக் லிவிங்ஸ்டோன், விவசாயம் என்ற பெயரில் கொள்ளையடிக்கும் மோசடி கும்பலை அடையாளம் காணவே இந்த முயற்சி என்றார். அடித்தட்டு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை மோசடி செய்து அனுபவிக்கும் போலி விவசாயிகளை அம்பலப்படுத்துவது மட்டுமல்லாமல், உண்மையான விவசாயிகளுக்கு தேவையான உரிமைகளை சரியான நேரத்தில் பெறுவதற்கு வழிகாட்டுவோம். விவசாயிகளுக்கும், அரசுக்கும் இணைப்பு பாலமாக இருப்பதால், பார்வையாளர்கள் விவசாயத்தையும் விவசாயிகளையும் எவ்வாறு செழிக்கச் செய்வது குறித்து இந்த நிகழ்ச்சி இருக்கும். விவசாயிகளுக்கான "Friday For Farmers" இயக்கத்திற்கான 87544 48755 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தங்கள் ஆலோசனைகளை அனுப்புவதன் மூலம் இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக நேயர்கள் இருக்கலாம். இந்த இயக்கம் விவசாயிகளைளின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்கும் வகையில், அரசாங்கத்தையும், அரசின் கொள்கைகளையும் ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்டு தீர்வு காண முயற்சி செய்யும் . சத்தியம் டிவியின் "Friday For Farmers" இயக்கம், பிரச்சனைகளை சுட்டிக் காட்டுவது மட்டுமின்றி, பிரச்சனைகளுக்கு தீர்வுகளையும் வழங்கும். பயிர் வளர்ப்பு மட்டுமின்றி கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பால் பண்ணை போன்ற அனைத்து வகை விவசாயிகளும் பயன்பெறும் வகையில் ஆலோசனைகளை வழங்கும். சத்தியம் டிவியின் "Friday For Farmers" நிகழ்ச்சி மக்கள் இயக்கமாகவும், மௌனப் புரட்சியாகவும் இருக்கும்