நியூசிலாந்து அணியுடன் நடந்த 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில், 9 ரன் வித்தியாசத்தில் போராடி வென்ற பாகிஸ்தான் 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.
நியூசிலாந்து அணியுடன் நடந்த 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில், 9 ரன் வித்தியாசத்தில் போராடி வென்ற பாகிஸ்தான் 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. கடாபி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச… பாகிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன் குவித்தது. கேப்டன் பாபர் ஆஸம் 69 ரன் (44 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), உஸ்மான் கான் 31, பகார் ஸமான் 43 ரன் விளாசினர்.
நியூசி. தரப்பில் ஜகாரி, ஓ’ரூர்கே, பென் சியர்ஸ், ஈஷ் சோதி, ஜேம்ஸ் நீஷம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 19.2 ஓவரில் 169 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. செய்பெர்ட் 52, கேப்டன் பிரேஸ்வெல் 23, நீஷம் 16, ஜோஷ் கிளார்க்சன் 38* ரன் எடுத்தனர். பாக். பந்துவீச்சில் ஷாகீன் ஷா அப்ரிடி 4, உசாமா மிர் 2, ஷதாப் கான், இமத் வாசிம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை ஷாகீன் ஷா அப்ரிடி தட்டிச் சென்றார்.