சரியாக 35 மாநிலத் தலைநகரங்கள் சொல்லி சாதனை படைத்த 3 வயது மழலை!

சரியாக 35 மாநிலத் தலைநகரங்கள் சொல்லி சாதனை படைத்த 3 வயது மழலை!

திருவேற்காடு அருகே நூம்பலைச் சேர்ந்தவர் டெனிதா. இவரின் மூன்று வயது ஆண் குழந்தை ஜெரேமியா. மழலை மாறாத தனது குரலில் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களையும் 53 நொடிகளில் மிகச் சரியாகச் சொல்கிறார்.

நினைவாற்றலில் அசத்தும் இந்த மழலை இதுவரை பள்ளிக்குச் சென்றதில்லை. வகுப்பறைகளையும் பார்த்ததில்லை. எனினும் 53 விநாடிகளில் அனைத்துத் தலைநகரங்களின் பெயரையும் சொல்லி அசத்துகிறார். மாநிலத்தின் பெயரை எப்படி மாற்றிக் கேட்டாலும் உரிய பதிலை ஜெரேமியா உடனடியாக வழங்குகிறார்.

முன்னதாக, மூன்றரை வயது பாப்பா 1.40 நிமிடங்களில் 35 மாநிலத் தலைநகரங்களையும் சொல்லி சாதனை படைத்திருந்தார். 3 வயது ஜெரேமியா 53 விநாடிகளில் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். 'கலாம் விஷன் 2020' என்ற சாதனை நிகழ்ச்சியில் பங்குபெற்று, பரிசுகளையும் பெற்றுள்ளார். கின்னஸ் விருதுக்காக விண்ணப்பித்துக் காத்திருக்கிறோம்'' என்றார்.