''பாலிசிதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்'' - எல்ஐசி கொடுத்த புதிய வாய்ப்பு!

''பாலிசிதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்'' - எல்ஐசி கொடுத்த புதிய வாய்ப்பு!
''பாலிசிதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்'' - எல்ஐசி கொடுத்த புதிய வாய்ப்பு!
''பாலிசிதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்'' - எல்ஐசி கொடுத்த புதிய வாய்ப்பு!

பிரீமியம் கட்டத்தவறி காலாவதியான பாலிசிகளை பாலிசிதாரர்கள் மீண்டும் புதுப்பித்துக்கொள்ளலாம் என எல்ஐசி நிறுவனம் அறிவித்துள்ளது.2014 ஜனவரி 1ம் தேதிக்குப் பிறகு எடுத்த பாலிசிக்கான பிரீமியம் தொகை தொடர்ந்து 2 ஆண்டுகள் செலுத்தப்படாமல் இருந்தால் அந்த பாலிசி காலாவதியான பாலிசியாக கருதப்படும் என 2013-ம் ஆண்டு எல்ஐசி நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டது. பிரீமியம் தொகை கட்டத்தவறும் பாலிசிகளை மீண்டும் புதுப்பிக்க முடியாது.

ஆயுள் காப்பீடு எடுக்கும் மக்கள் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பிரீமியம் தொகை கட்டாமல் போய்விடுகிறார்கள். இதனால் அந்த பாலிசிகள் காலாவதியாகி விடுகிறது. தேவைப்பட்டால், அவர்கள் மீண்டும் ஒரு புதிய பாலிசியை எடுக்க வேண்டி உள்ளது. இதனை அடுத்து பிரீமியம் கட்டத்தவறி காலாவதியான பாலிசிகளை மீண்டும் புதுப்பித்துக்கொள்ளும் முறை வேண்டுமென காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தை எல்ஐசி நிறுவனம் அணுகியது.

அதன்படி, பாலிசிகளை புதுப்பிப்பது தொடர்பாக எல்ஐசி நிறுவனம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ''2014ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்குப் பிறகு எடுக்கப்பட்ட பங்குச்சந்தையுடன் தொடர்பில்லாத பாலிசிகளை, முதல் செலுத்தப்படாத பிரீமியம் தேதியில் இருந்து 5 ஆண்டுகளுக்கு உள்ளும், பங்குச்சந்தையுடன் தொடர்புடைய பாலிசிகளை 3 ஆண்டுகளுக்குள்ளும் மீண்டும் புதுப்பித்துக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. எனவே பாலிசிதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தங்களது பாலிசிகளை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்'' எனவும் குறிப்பிட்டுள்ளது.