திண்டுக்கல்லில் ரஜினி ரசிகர்களின் போஸ்டர் பரபரப்பு

திண்டுக்கல்லில் ரஜினி ரசிகர்களின் போஸ்டர் பரபரப்பு
திண்டுக்கல்லில் ரஜினி ரசிகர்களின் போஸ்டர் பரபரப்பு

திண்டுக்கல்லில் ரஜினி ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு

திண்டுக்கல்:

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்பது புதிராக இருந்து வருகிறது. ஆனால், ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும் என்பதில் அவருடைய ரசிகர்கள் உறுதியாக உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பற்றிய தகவலால், அவர் அரசியலுக்கு வருவதில் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டினர்.

அதன்படி திண்டுக்கல்லிலும் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி உள்ளனர். அதில், “எங்களின் இறுதி நம்பிக்கை நீங்கள் மட்டும் தான்... எங்கள் ஓட்டு உங்கள் ஒருவருக்கு மட்டுமே... ஓட்டுன்னு போட்டா ரஜினிக்கு தான், வா தலைவா வா” என்று அச்சிட்டுள்ளனர்.

இந்த போஸ்டர் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.