தமிழகத்தில் மேலும் 5,697 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 5,697 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் புதிதாக 5,697 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக 5,697 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,14,208 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 989 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 68 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பலியானோரின் மொத்த எண்ணிக்கை 8,502 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் ஒரேநாளில் 5,735 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 4,58,900 பேர் குணமடைந்துள்ளனர். 46,806 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று 80,623 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை மொத்தம் 60,48,832 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.