“மேக்ஸ் ரீச் அவுட்”

“மேக்ஸ் ரீச் அவுட்”
“மேக்ஸ் ரீச் அவுட்”
“மேக்ஸ் ரீச் அவுட்”
“மேக்ஸ் ரீச் அவுட்”

“மேக்ஸ் ரீச் அவுட்”

ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியில்  திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 5:00 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி “மேக்ஸ் ரீச் அவுட்”.

நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் இந்த நிகழ்ச்சியில் புத்தம் புது பாடல்கள் மற்றும் சினிமா சார்ந்த தகவல்களை நேயர்களோடு நேரடியாக பேசி அவர்களின் மாலை பொழுதனை மகிழ்விக்கும் ஒரு நிகழ்ச்சியாக மேக்ஸ் ரீச் அவுட்  இருக்கிறது.

சினிமா சார்ந்த பிரபலங்களின் பிறந்தநாள் மற்றும் அவர்கள் பணியாற்றிய படங்களில் இருந்து பாடல்கள் மட்டுமின்றி நேயர்களுக்கு பிடித்த தலைப்புகள் கொடுத்து அவர்களும் அந்த தலைப்பினை பற்றி பேசுவதற்கு ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தித் தருகிறது இந்த நிகழ்ச்சி .

இதில் தமிழ்நாடு மட்டுமன்றி பிற மாநில நேயர்களும் பங்கெடுப்பது மிகவும் சிறப்பு. திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 5:00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியினை தொகுப்பாளர்கள் ஹரி தர்ஷன், மனோஜ், இஜாஸ், ஹரிஷ், ரித்தி , சந்தியா, சிவஸ்ரீ ஆகியோர் தொகுத்து வழங்குகிறார்கள்.