நெஞ்சில் கைக்குழந்தை . டிவிஎஸ் XL-ல் உணவு டெலிவரி செய்யும் பெண்

நெஞ்சில் கைக்குழந்தை . டிவிஎஸ் XL-ல் உணவு டெலிவரி செய்யும் பெண்

சென்னையில் தனது கைக்குழந்தையோடு டிவிஎஸ் XL-ல் உணவு டெலிவரி செய்ய சென்ற பெண்ணின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சென்னை போன்ற பெருநகரங்களில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதனால் அவர்கள் பெண்களையும் வேலைக்கு எடுத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் இது போன்ற நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் பெண் ஒருவர் சமூகவலைதளத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

தனது டிவிஸ் எக்ஸ்.எல் பைக்கில் முன்னால் கைக்குழந்தையை மார்போடு கட்டிக்கொண்டு உணவு டெலிவரி செய்ய செல்கிறார். இதை யாரோ புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் அப்லோட் செய்ய அனைவரையும் உருக வைத்துள்ளது இந்த புகைப்படம். ஆனால் இதுபோல கஷ்டப்பட்டு உழைக்கும் டெலிவரி செய்பவர்களுக்கு சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் முறையாக சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.