தசரா பண்டிகையை முன்னிட்டு உயர்நீதிமன்றத்துக்கு அக் 17 முதல் 27 வரை விடுமுறை

தசரா பண்டிகையை முன்னிட்டு உயர்நீதிமன்றத்துக்கு அக் 17 முதல் 27 வரை விடுமுறை
தசரா பண்டிகையை முன்னிட்டு உயர்நீதிமன்றத்துக்கு அக் 17 முதல் 27 வரை விடுமுறை

தசரா பண்டிகையை முன்னிட்டு உயர்நீதிமன்றத்துக்கு அக்டோபர் 17 முதல் 27 வரை விடுமுறை - பதிவாளர் சி.குமரப்பன் அறிவிப்பு


சென்னை: தசரா பண்டிகையை முன்னிட்டு உயர்நீதிமன்றத்துக்கு அக்டோபர் 17 முதல் 27 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் மைசூருக்கு அடுத்தபடியாக குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இதில் உள்ளூர் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். பக்தர்கள் குறவன், குறத்தி, ராஜா, குரங்கு, கரடி, மாடன், கருப்பசாமி, முருகர், கிருஷ்ணர், அம்மன், கணபதி, சிவன், பெருமாள் மற்றும் காளி வேடங்கள் தரித்து ஊர் முழுவதும் சென்று காணிக்கை வசூல் செய்வார்கள்.

பின்னர் அதனை கோயில் உண்டியலில் செலுத்தி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவர். திருவிழாவையொட்டி அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் காப்பு கட்டி விரதம் தொடங்குவர். இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை மறுதினம் (17ம்தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஆனால் கொரோனா பரவலை தடுக்க கொடியேற்றம், 26ம் தேதி நடைபெறும் சூரசம்ஹாரம், 27ம்தேதி நடைபெறும் கொடியிறக்கம் ஆகிய நாட்களில் மக்கள் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் பக்தர்கள் வேடமணிந்து மேளதாளங்களுடன் கோயிலுக்கு வரவும் அனுமதி மறுத்துள்ளது.

அத்துடன் தங்கள் ஊரிலேயே பக்தர்கள் காப்பு அணிந்து வேடமிடுவதோடு ஊரிலேயே விரதத்தை முடித்துக்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும் வரும் 18ம்தேதி முதல் 25ம்தேதி வரை தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்து தரிசனம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தசரா பண்டிகையை முன்னிட்டு உயர்நீதிமன்றத்துக்கு அக்டோபர் 17 முதல் 27 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர வழக்குகளுக்கு அக்டோபர் 20ல் மனுதாக்கல் செய்தால் அக்டோபர் 22ல் விசாரணை நடைபெறும் என பதிவாளர் சி.குமரப்பன் தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பார்த்திபன், வேல்முருகன், ஜெயச்சந்திரன், சுவாமிநாதன் வழக்குகளை விசாரிப்பர். நீதிபதிகள் ஆஷா, சரவணன் ஆகியோரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரிப்பார்கள் என்று பதிவாளர் தெரிவித்துள்ளார். மதுரை கிளையில் நீதிபதிகள் கல்யாண சுந்தரம், அப்துல் குத்தூஸ் ஆகியோர் வழக்குகளை விசாரிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.