உலகளவில் 11 லட்சத்தை தாண்டியது கொரோனா உயிர் பலி. 3.91 கோடியை தாண்டியது

உலகளவில் 11 லட்சத்தை தாண்டியது கொரோனா உயிர் பலி. 3.91 கோடியை தாண்டியது
உலகளவில் 11 லட்சத்தை தாண்டியது கொரோனா உயிர் பலி. 3.91 கோடியை தாண்டியது

உலகளவில் 11 லட்சத்தை தாண்டியது கொரோனா உயிர் பலி. 3.91 கோடியை தாண்டியது!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 91 லட்சத்தை கடந்தது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 91 லட்சமாக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 3 கோடியே 91 லட்சத்து 57 ஆயிரத்து 923 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 86 லட்சத்து 80 ஆயிரத்து 036 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 70 ஆயிரத்து 888 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 2 கோடியே 93 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளது . ஆனாலும், கொரோனாவால் இதுவரை 11 லட்சத்து 02 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - 8,216,315
இந்தியா - 7,365,509
பிரேசில் - 5,170,996
ரஷியா - 1,354,163
ஸ்பெயின் - 972,958
அர்ஜெண்டினா - 949,063
கொலம்பியா - 936,982
பெரு - 859,740    
மெக்சிகோ - 834,910
பிரான்ஸ் - 809,684

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா - 222,717
பிரேசில் - 152,513
இந்தியா - 112,146
மெக்சிகோ - 85,285
இத்தாலி - 36,372    
பெரு - 33,577
ஸ்பெயின் - 33,553
பிரான்ஸ் - 33,125
ஈரான் - 29,605
கொலம்பியா - 28,457

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-

இந்தியா - 6,448,658
அமெரிக்கா -5,320,139
பிரேசில் - 4,599,446
ரஷியா - 1,048,097
கொலம்பியா - 826,831
பெரு - 764,750
அர்ஜெண்டினா - 764,859