தெற்கு ஆசியாவின் முதல் டிஜிட்டல் பிஇடி/சிடிஸ்கேன் அப்பல்லோ மருத்துவமனையில் அறிமுகம்

தெற்கு ஆசியாவின் முதல் டிஜிட்டல் பிஇடி/சிடிஸ்கேன் அப்பல்லோ மருத்துவமனையில் அறிமுகம்

தெற்கு ஆசியாவின் முதல் டிஜிட்டல் பிஇடி/சிடிஸ்கேன் நிறுவப்பட்டுள்ளதன் மூலம் புற்றுநோய் வளர்ச்சியை கண்டறிந்து தனிப்பட்ட முறையில் சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்கமுடிகிறது: சீமென்ஸ்ஹெல்லதினீர்ஸ் நிறுவனத்தால் இது நிறுவப்பட்டுள்ளது.

* முதன் முதலாக பிஇடி - சிடி – பயோகிராஃபிக் விஷன் 600-ஐ சென்னை அப்பல்லோ மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது. இது துல்லியமான பிஇடி/சிடி படம் பிடித்தலுக்கு வகை செய்கிறது


* இந்த வகையிலேயே முதலாவதான அதிநவீன டிஜிட்டல் பிஇடி/சிடி, பல்வேறு புற்று நோய்களை தொடக்கத்திலேயே கண்டறிந்து புரோட்டான் பீம்தெரப்பியுடன் சரி பார்த்து சிறந்த சிகிச்சை வழங்க உதவுகிறது.

* எதிர்மறையான பக்கவிளைவுகளில் இருந்து நோயாளிகளைக் காப்பதுடன் பயனற்ற சிகிச்சை முறைகளைக் குறைத்து செலவையும் குறைக்கிறது. பயோ கிராஃப்விஷன் 600 மூலம் திறம்பட கண்டறியப்பட்டு தொடக்கத்திலேயே சிகிச்சைவழங்க முடிகிறது

சென்னை, மே 27:- 2019:- ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் நம்பகமான மருத்துவமனை குழுமமான அப்பல்லோ மருத்துவமனை, தெற்கு ஆசியாவின் முதல் டிஜிட்டல் பிஇடி/ சிடி ஸ்கேனிங் இயந்திரத்தை சென்னையில் நிறுவியுள்ளது. 

அதிநவீன இயந்திரமான இது கதிரியக்க நோய் கண்டறிதல் அம்சத்தில் பாசிட்ரான் எமிஷன் டோமோகிராஃபி எனப்படும் பாசிட்ரான் கதிர்வீச்சு வரைவியலில் பயன்படுத்தப்படுகிறது. அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் செயல் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து இயந்திரத்தை அறிமுகம் செய்து தொடங்கிவைத்தார்.  அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் சுனீதா ரெட்டி, சீமென்ஸ் ஹெல்த்தினீர்ஸ் இந்தியா நிறுவனத்தின் செயல் இயக்குநர் விவேக்கனாடே ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோருக்கு புற்றுநோய் இருப்பது புதிதாகக்கண்டறியப்படும் நிலையில் அதை தொடக்க நிலையில் மிகத்துல்லியமாகக் கண்டறிந்து சிறந்த சிகிச்சை உத்திகளை வகுக்க வேண்டியது தற்போதைய தேவை ஆகும். ’பயோகிராஃப்விஷன் 600’அறிமுகம் செய்யப்பட்டுள்ளதன் மூலம் பாதிக்கப்பட்ட நபரின் நோய் தன்மையை கண்டறிந்து சரியான நேரத்தில் தனித்துவமான முறையில் சரியான சிகிச்சை அளிக்கமுடியும்.

அப்பல்லோ மருத்துவமனை குழுமத் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி கூறுகையில், “நோயாளிகளின் நலன்களை மையமாகக் கொண்ட எங்களது எண்ணங்கள் அவர்களுக்கான சிறந்த சிகிச்சை முறைகளில் முதலீடு செய்ய எங்களைத் தூண்டுகிறது. அதிநவீன தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதில் அப்பல்லோ மருத்துவமனை இந்தியாவிலும் இந்த பிராந்தியத்திலும் முன்னோடியாகத் 
திகழ்ந்து வருகிறது. 

புரோட்டான் தெரப்பி எனப்படும் அதிநவீன கதிரியக்க சிகிச்சைக்காக முன்பு மேற்கத்திய நாடுகளுக்கே மக்கள் செல்ல வேண்டி இருந்தது. இப்போது அப்பல்லோ புரோட்டான் மையம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளதால், இது 350 கோடி மக்களின் மனதில் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது. பல்வேறு விதமான புற்று நோய்களுக்கு புரோட்டான் தெரப்பி சிறந்த சிகிச்சை முறையாகவும் மிகக் குறைந்த பக்க விளைவுகள் கொண்ட சிகிச்சை முறையாகவும் திகழ்கிறது.” என்றார்.

இதன் நன்மைகள் குறித்து அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் சுனீதா ரெட்டி கூறுகையில், “உலகின் மிகச் சிறந்த மையமாகத் திகழ்ந்து மருத்துவமுறைகளில் அதிஉன்னத தன்மையை வழங்குவது அப்பல்லோ மருத்துவமனையின் மரபணுவில் உள்ளதாகும். அப்பல்லோ புரோட்டான் மையத்தில், ’சீமென்ஸ் பயோகிராஃப்விஷன் 600’ உள்ளிட்ட எங்களது அனைத்து முதலீடுகளும் உலகத்தரத்திலான சிகிச்சையையும் பராமரிப்பையும் நோயாளிகளுக்கு வழங்க வேண்டும் என்ற எங்களது நிலைப்பாட்டின் ஒரு பகுதி தான்.” என்றார்.

புற்றுநோய் சிகிச்சை மற்றும் மறு வாழ்வில், பிஇடி/சிடி முறை தவிர்க்க முடியாத நோய் கண்டறிதல் மற்றும் முன்கணிப்பு கருவியாக உள்ளது. சீமென்ஸ் ஹெல்த்தினீர்ஸ் நிறுவனத்தின் பயோகிராஃப்விஷன் 600 கருவி நோய் வளர்ச்சி கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறைகளில் தெளிவான புரிதலை ஏற்படுத்த பயன்படுகிறது. இதன் மூலம் நோயாளிக்கு தகுந்த, அவர்களுக்கு மிக பொருத்தமான சிகிச்சையை வழங்க முடியும். பிஇடி/சிடி வரைவியலில் அதிக நுணுக்கம், துல்லியம், செயல்திறன் போன்றவற்றை வழங்கும் வகையில் பயோகிராஃப்விஷன் 600 வடிவமைக்கப்பட்டுள்ளது. சந்தையில் அதிவேக மற்றும் துல்லிய உணர்திறனை கொண்ட பயோகிராஃப்விஷன் 600 கருவி, ஸ்கேன் செய்வதற்கான நேரத்தை குறைப்பதுடன் நோயாளிகள் கதிரியக்கத்தின் இருக்கும் நேரத்தையும் குறைக்கிறது.

புற்றுநோயியல் மையத்தில் டிஜிட்டல் பிஇடி/சிடி ஸ்கேனிங்கின் பயன்கள்:

* நோயாளிகளுக்கு கதிரியக்கத்தை குறைக்கிறது 
* புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய உதவுகிறது
* ஸ்கேன் செய்யும் நேரம் விரைவாகிறது. மேலும் நோயாளிகளுக்கு செளகரியத்தையும் அளிக்கிறது.
* புற்று நோயியலில் மிகத்துல்லியமான சிறிய கட்டிகளையும் கண்டறியும்
* சிறந்த மருத்துவமுறை முடிவுகளைக் கொடுக்கும்
* அதிக துல்லியம், வரைவியல் மற்றும் தெளிவு கொண்டுள்ளதால், சரியான சிகிச்சையை அளிக்க உதவுகிறது.
* புற்றுநோயியலில் நோயாளிகளுக்கு மேம்பட்ட் பராமரிப்பு வசதி வாய்ப்புகளை அளிக்கிறது.
* மீண்டும் நோய் ஏற்படும் தன்மையைக்கண்டறிந்து மறுவாழ்வு அளிக்க ஏற்றது
* டிஜிட்டல் டிடெக்டரின் உணர்தல் திறன் காரணமாக அதிக துல்லிய படம் எடுக்க உதவுகிறது.
* குறைந்த நோரத்தில் ஸ்கேன் செய்யப்படுவதால் நோயாளிகளுக்கு வசதியாக இருப்பதுடன் அவர்கள் உடல் அசைவுகளை ஏற்படுத்த வேண்டிய நிலையும் குறைகிறது. அசைவு குறைவதால் படத்தின் தரம் குறைவது தவிர்க்கப்படுகிறது
* ஆர்டி திட்டமிடலுக்கு 4டி மூலம் வழி ஏற்படுகிறது

பயோகிராஃப் மாதிரி டிஜிட்டல் பிஇடி/சிடி இயந்திரத்தின் சிறப்பு அம்சங்கள்:

* நாட்டிலேயே முதல் டிஜிட்டல் பாரமெட்ரிக் இமேஜிங்
* இந்த துறையிலேயே மிக அதிகவேகம் – 214 பிஎஸ்
* சந்தையில் அதிக உணர்திறன் – 100 சிபிஎஸ் / கேபிக்யூ
* 78 சென்டிமீட்டர் போர் அளவுடன் அதிக அகலதுளை அளவு
* சிறிய காயத்தைக் கூட துல்லியமாக கண்டறியும் பகுப்பாய்வு (ரெசல்யூஷன்)
* ஃப்ளோமோஷன் மற்றும் பாராமெட்ரிக் பிஇடி இமேஜிங்

டிஜிட்டல் பிஇடி/சிடி ஸ்கேனிங் இயந்திரத்தால் வழங்கப்படும் தகவல்களைக் கொண்டு மருத்துவர்களால் துல்லியமாக நோயைக்கண்டறிந்து நோயாளிகளுக்கு சிறந்தசிகிச்சை அளிக்க முடியும். சாதாரணமான பிஇடி/சிடி இயந்திரங்களில் தெரியாமல் போகக்கூடிய சிறிய சிதைவுகள் கூட பயோகிராஃப்பி இடி/சிடிஸ்கேனிங்கில் துல்லியமாகத் தெரியும்.