ஒடிசாவில் லாரி ஓட்டுநருக்கு அதிகபட்ச அபராதம் விதிப்பு

ஒடிசாவில் லாரி ஓட்டுநருக்கு அதிகபட்ச அபராதம் விதிப்பு

நாட்டிலேயே அதிகளவில் ஒடிசா லாரி டிரைவருக்கு பல விதிகளை மீறியதற்கு அவருக்கு மொத்தம் ரூ.86 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.

இப்போது போக்குவரத்து துறையில் விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒடிசாவில் அசோக் ஜாதவ் என்ற லாரி ஓட்டுநர் சாலை விதிகளை மீறியதால் அவருக்கு இந்தியாவிலேயே கூடுதல் அபராதத் தொகையாக 86,500 ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது.

ஐந்து மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு லாரி ஓட்டுநர், அபராத தொகையைப் போக்குவரத்து காவலர்களிடம் செலுத்தியுள்ளார். இந்த சம்பவம் வாகன ஓட்டுநர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.