கேப்டனாகும் மேற்கு இந்திய தீவின் அணியின் பொலார்டு

கேப்டனாகும் மேற்கு இந்திய தீவின் அணியின் பொலார்டு

வெஸ்ட் இண்டீஸ் அணி உலக கோப்பையில் படுமோசமாக தோற்று லீக் சுற்றுடன் வெளியேறியது. அதன்பின்னர் சொந்த மண்ணில் இந்தியாவிடம் மூன்றுவிதமான போட்டி தொடர்களிலும் ஒயிட்வாஷ் ஆனது. 3 டி20 போட்டிகள் 2 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் என அனைத்திலுமே தோற்றது.
தொடர் தோல்விகளின் எதிரொலியாக ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஜேசன் ஹோல்டரையும் டி20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து பிராத்வெயிட்டையும் நீக்க வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

இதையடுத்து ஒருநாள் மற்றும் டி20 ஆகிய இரண்டு அணிகளுக்குமே பொல்லார்டை கேப்டனாக நியமிக்கலாம் என தேர்வுக்குழு பரிந்துரைத்துள்ளது. அதன்மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அந்நாட்டு கிரிக்கெட் வாரிய இயக்குநர்களில் பெரும்பாலான வாக்குகள் பொல்லார்டுக்கு ஆதரவாக விழுந்துள்ளன. எனவே பொல்லார்டு விரைவில் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.