இ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாக நடிக்கும் "கட்டில்" திரைப்பட குழுவினரின் பொங்கல் கொண்டாட்டம்
மும்பைபெண்ணான சிருஷ்டிடாங்கே கொண்டாடிய பொங்கல் கொண்டாட்டம்
மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் "கட்டில்" திரைப்படத்தை இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடிக்கிறார். சிருஷ்டிடாங்கே கதாநாயகியாக நடிக்க, உடன் பல பிரபலங்கள் இப்படத்தில் நடிகர்களாக இணைந்துள்ளனர்.
படப்பிடிப்பின் போது "கட்டில்" திரைப்படத்தின் படக்குழுவினர் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படும் இந்த பண்டிகையை "கட்டில்" படத்தின் கதாநாயகியாக நடிக்கும் மும்பை பெண் சிருஷ்டிடாங்கே மற்றும் படக்குழுவினரோடு கொண்டாடியது தனிச்சிறப்பு என்றார் இ.வி.கணேஷ்பாபு.
இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் "கட்டில்" திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் இசை வெளியீடு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என இ.வி.கணேஷ்பாபு கூறினார்.