கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரை விமர்சனம்
ஆன்லைன் ஷாப்பிங் மூலமாக நடக்கும் திருட்டு, கார் லாக்கை எப்படி திறக்கலாம், ரோல்ஸ் ராய்ஸ் காரில் உள்ள தொழில்நுட்ப பிரச்சினை என்பது போன்ற சில சுவாரசியங்களைக் கொண்டு நல்லதொரு திரைக்கதை அமைத்து அப்ளாஸ் அள்ளுகிறார் அறிமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி. ஒவ்வொரு காட்சிக்குமே அவர் சொல்லியிருக்கும் நுணுக்கங்கள் அட போட வைக்கின்றன.துல்கர் சல்மான் மற்றும் ரக்ஷன் இருவருமே மாடர்ன் ஹை டெக் இளைஞர்கள். இப்படியெல்லாம் நமக்கு நடக்காமல் இருக்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றுகிறது. இந்தப் படத்துக்குப் பிறகு ஆன்லைனில் பொருள் ஏதேனும் வாங்கினால் ஒன்றுக்கு இரண்டு முறை செக் பண்ணப் போவது நிச்சயம்.
சித்தார்த்துக்கு பியூட்டிஷியனான மீரா(ரித்து வர்மா) மீது காதல் ஏற்பட்டு ப்ரொபோஸ் செய்கிறார். மீராவும் சித்தார்த்தின் காதலை ஏற்கிறார். இந்நிலையில் காளிஸுக்கு மீராவின் தோழி ஸ்ரேயா(நிரஞ்சனி அகத்தியன்) மீது காதல் வருகிறது.ரக்ஷனும், ரீத்து வர்மாவுக்கு தோழியாக வரும் நிரஞ்சனாவைக் காதலிக்கிறார். நால்வரும் நண்பர்களாகிறார்கள்.
அதில் ஒரு சம்பவத்தில் காவல்துறை அதிகாரியாக இருக்கும் கவுதம் மேனன் பாதிக்கப்படுகிறார். அப்போது ஏன் இப்படியானது என்று விசாரிக்கத் தொடங்குகிறார். இருவரையும் கண்டுபிடிக்க பல்வேறு முயற்சிகள் செய்தும் அவர்கள் தப்பிக்கிறார்கள். இதற்குப் பிறகு கவுதம் மேனன் கண்டுபிடித்தாரா, ரீத்து வர்மா என்ன ஆனார், காதல் கைகூடியதா என்பதை எல்லாம் ரொம்ப சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறது திரைக்கதை.
சரியான அளவில் காதல், த்ரில், நகைச்சுவை ஆகியவற்றை கொடுத்துள்ளார் இயக்குநர்.