திரௌபதி திரைவிமர்சனம்

திரௌபதி திரைவிமர்சனம்

கிராமத்தில் சிலம்பம் ஆசிரியராக இருக்கிறார் ருத்ர பிரபாகரன்(ரிச்சர்ட்). அவரின் மனைவி திரௌபதி(ஷீலா ராஜ்குமார்). வெளியூர் அரசியல்வாதி அந்த கிராமத்தில் ஒரு நிலத்தை வாங்கி போர் போட்டு தண்ணீர் எடுத்து விற்பனை செய்வதை பிரபாகரனும், திரௌபதியும் எதிர்க்கிறார்கள்.

இதையடுத்து அந்த அரசியல்வாதி திரௌபதியின் தங்கைக்கும், வேறு சாதியை சேர்ந்த இளைஞருக்கும் பதிவுத் திருமணம் நடந்ததாக போலிச் சான்று தயாரித்து அந்த பெண்ணின் தந்தைக்கு அனுப்பி வைக்கிறார்.

மனைவி, அவரது தங்கை இருவரையும் ஆணவக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்குச் செல்கிறார் ரிஷி ரிச்சர்ட். ஜாமீனில் 6 மாதங்கள் கழித்து வருகிறார்.ஜெயிலில் இருந்து வந்த பிறகு திரௌபதியின் சபதத்தை முடிக்க வேண்டும் என்று நண்பரிடம் கூறுகிறார். அடுத்து என்ன நடக்க போகிறது என்பது தான் மீதி கதை 

இரண்டாவது பாதியில் நடந்தது என்ன என்று ஃபிளாஷ்பேக் விரியும்போது படம் மொத்தமாக வலுவிழந்து போகிறது. இதில் சொல்லப்படுவதும் ஒரு முக்கியமான விஷயம்தான். 

முதல் பாதி பரபரப்பாக செல்கிறது. திரைக்கதை பரிட்சயமாக உள்ளது என்றாலும் பிரபாகரனின் வாழ்க்கை, திரௌபதியின் மரணத்தை சுற்றியுள்ள விஷயங்கள் சுவாரஸ்யமாக உள்ளது. இரண்டாம் பாதி மெதுவாக செல்வதுடன், நீளமும் அதிகம்.

படத்தில் சொல்லப்பட்டும் ஒரு செய்தியும் கண்டிப்பாக தமிழ் சினிமாவுக்குப் புதிது. அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயமும் கூட. எனவே, அந்த விதத்தில் நிஜமாகவே ஒரு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிற படம் திரௌபதி.